நிறைகளை ஏற்றுக்கொள்ளவே நம்மில் பலர் எப்போதும் தயாராக இருப்போம் .எதனையும் பெற்றுக்கொள்ளவே மனிதனின் கைகளும்,மனதுகளும் துடித்துக்கொண்டு இருக்கும் !வாழ்க்கை என்பது நிறைகளின் சங்கமம்மா ?இல்லை வாழ்க்கை என்பது பெற்றுக்கொள்வதற்கு மட்டுமா ?
இன்று அன்பு கூட சுயநல வலைக்குள்ளே சிக்கித் தவிக்கிறது !எதையாவது எதிர்பார்த்துதான் அன்பு இங்கே துளிர்க்கிறது! தனக்காக ,தன் இனத்திற்காக , தன் மொழிக்காக ,தன் மதத்திற்காக என்று அன்பின் எல்லைகள் இங்கே சுருங்கிவிட்டன.
அதனாலதான் 6 அறிவு இருந்தும் கூட சக மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளத்தெரியாத மிருகத்தை விட கேவலமாக மனிதன் இருக்கிறான்!
ஏன் மதர் தெரசா காட்டிய அன்பு அனைவரையும் சென்றடைந்தது? அவர்களின் அன்பு தூய்மையானது அதற்க்கு இன ,மத ,மொழி ,ஜாதி ,நாடு,ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு அறியாதது !
அன்பும் ,கண்ணீரும் ,ரத்தமும் ,உணர்வுகளும் எல்லோருக்கும் பொதுவானது என்பதை ஏன் தான் மனிதனின் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று தெரியவில்லை ?
பெற்றுக்கொள்ள மட்டும் மனிதன் இங்கு படைக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை !

0 comments:
Post a Comment