பொதிகை சாரல்



Saturday, October 27, 2012

பீட்சா - திரை விமர்சனம்


ஒரு ஊரில் ஒரு பேய் பங்களா,அங்கெ சென்றவர்கள் எல்லாம் மாயம் - என்ற வரிகளை நீங்கள் சிறுவயதில் கேட்டு இருக்கலாம்!
அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு பீட்சா பையன் ,அவன் காதலி என்று திரைக்கதையை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்கள் !
வசனம் ஒவ்வொன்றும் கண கச்சிதம்.
பீட்சா பையன் தன் காதலியை கரம் பிடித்தாரா ? பீட்சா பையனின் கடை முதலாளி என்ன பிசினஸ் செய்கிறார்? அவர் பொண்ணுக்கு பிடித்திருப்பது பேயா?

ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் கதாநாயகி ஒரு பேயா? இது போன்ற பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களுடன் படம் நகர்ந்து இறுதியில் கூட
திகிலோடு முடிகிறது.
இதயம் பலகீனம் உள்ளவர்கள் தவிர அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு த்ரில்ளீர் படம் நம்ம பீட்சா!
மொத்தத்தில் இந்த பீட்சா ஒரு தமிழனின் கற்பனை திரையில் தந்த சுவையான உணவு!
பீட்சா - சபாஷ் ரகம்!
Share/Bookmark

Saturday, October 20, 2012

தமிழகத்தில் கனமழை:


     தமிழகத்திற்கு பெரும் தண்ணீரைக் கொடுப்பது வட கிழக்கு பருவ மழை என்பது அனைவரும் அறிந்ததே. வட கிழக்கு பருவ மழை இப்பொழுதுதான் பெய்யும் என்பதை ஓரளவு அறுதி இட்டுச் சொல்லக் கூடிய அறிவியல் உலகத்தில் நாம் இன்று இருக்கிறோம்! இருந்தும் ஏன் இத்தனை தொய்வு
மழை நீர் எங்கு செல்வது என்று தெரியாமல் சென்னையில் மழை நீர் அங்கங்கே சாலைகளில் தேங்கி உள்ளது!

     டெங்கு வேறு பரவும் இந்த சமயத்தில் இவ்வாறு நடப்பதுதான் அழகா ? அரசு முன் ஏற்பாடோடு இருக்க வேண்டாமா?

வந்த பின்பு காப்பது மட்டும் அரசு அல்ல,வரும் முன் காப்பதே நல்ல அரசு !

Share/Bookmark

Saturday, October 13, 2012

இருவகை மனிதர்கள்:


வாழ்க்கையில் இருவகை மனிதர்கள் உண்டு ஒருவர் "இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்பவர்கள்!"
மற்றும் ஒருவர் "இப்படியும் வாழலாம் என்று வாழ்பவர்கள்!"


Share/Bookmark

Sunday, October 7, 2012

தொடரும் சோகம்!

எது தீவிர வாதம் ,எது சுந்தந்திரப் போராட்டம் என்பதை 21  ஆம் நூற்றாண்டிலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாத படி இந்த உலகில் அரசியல் ஆட்சி செய்கிறது.அதற்க்கு கண்ணீர்த் தீவே சாட்சி!
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்றோ போன அந்த மக்களிடத்தில் சமீப காலத்தில் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை, இவ்வளவு ஏன் நம்பிக்கை மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை!

உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத உயிர்கள் பிணங்களாக வாழும் இடத்தில், வலிகளை பொறுத்துக் கொண்டு பிணங்களை போல உயிர் வாழ்கின்ற மக்கள்.
ஒற்றுமை இல்லாது போனதால்,எதிர் காலமும் கேள்விக் குறியாய்ப் போன தேசிய இனம்!
யார் புரிந்து கொள்வார்கள்? யார் தீர்த்து வைப்பார்கள்? கேள்விகளே அதிகம்! இங்கே தொடரும் சோகம்!

Share/Bookmark

Saturday, September 29, 2012

தீண்டாமையில் ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?


   பிறப்பில் சிலர் உயர்ந்தவர் என்றும் , தாழ்ந்தவர் என்றும் நிர்ணயிக்கும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?
கடவுளா என்றால் அதற்கும் சரியான தகவல் இல்லை .ஏன் என்றால் இங்கே கடவுளில் கூட இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இருக்கிறதே ?
   கீழ் சாதிக்காரனை கோவிலுக்கு வர அனுமதிக்காத இந்த சமூகம் ,அவர்கள் தரும் காணிக்கையை மட்டும் அனுமதிப்பது எவ்வாறு?
தாழ்ந்த சாதிகாரனை உயர்ந்த பதவியில் அமர்த்திப் பார்க்காத இந்த சமூகம் ,அவனிடம் இருக்கும் வாக்குரிமைக்காக பிச்சை எடுப்பதை விட கேவலமாக நிற்கும்  போது எங்கே போனது இந்த சாதி ? ஏன் கூலி வேலைக்காக தாழ்ந்த சாதிகரனை பணிக்கு  அமர்த்த வேண்டும்?அப்பொழுது ஒட்டாதா அந்த சாதி?
என்ன இது வேடிக்கை ? ஏன் இந்த கீழ்த்தனம்?

    ஒன்று மட்டும் தெரிகிறது ,தனக்கு அடிமையாய் இருப்பவன் நாளை நமக்கு சரிசமமாக வரக்கூடாது என்ற கேவல எண்ணமே இந்த சாதியை உருவாக்கி இருக்கிறது ,பின்னாடி வரும் சந்ததி அதை தொடர்கிறது ?
உண்மையில் கீழ் சாதி எனப்படுபவன் , சாதி என்ற நோயால் பாதிக்கப் பட்ட மிருகம் !

Share/Bookmark