பொதிகை சாரல்



Monday, November 28, 2011

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை - யார் சொல்வது  சரி ? தமிழகம் கேட்பது சரியா? கேரளா சொல்வது என்ன ?நடந்தது என்ன ?நடப்பது என்ன? எது உண்மை ? இந்த கேள்வி உங்களுக்கும் எழுந்தால் பாருங்கள்;தெரிந்து கொள்ளுங்கள் ! இந்த உரல் கொண்டு ...

http://vimeo.com/18283950

Share/Bookmark

Sunday, November 20, 2011

புதியதாய் - பிறந்திடமாட்டார்களா?

ஒவ்வொரு நல்ல புத்தகங்களை வாசிக்கும் பொழுதும்
புதியதாய் பிறப்பதாய்
கேட்டதுண்டு பலர் சொல்லி !
அது போல
ஈழத்தின் காயங்களை
சிங்களத்தில் படிக்கும்பொழுது
அவர்களும் புதியதாய் - பிறந்திடமாட்டார்களா?

Share/Bookmark

Saturday, November 12, 2011

கொள்கைகள் மட்டும் சமாதியில் !

பாரதியார்,பெரியார் ,காமராஜர் என்று
தலைவர்களின் படங்களோ
ஜாதி கட்சிகளின் அலுவலகங்களில் !
ஏனோ அவர்கள் கொள்கைகள் மட்டும் சமாதியில் !


Share/Bookmark

Friday, October 14, 2011

என் நிலை கண்டீரா !

இங்கே தமிழ் வாழ தமிழன் வேண்டும் ;
தமிழன் வாழ பிற மொழியும் வேண்டும் !




Share/Bookmark

சில பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சந்தோசத்தின் அதிர்வுகள் ;
உள்ளத்தில் பூக்கட்டும் !-இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

புன்னகை மலரட்டும் ;
புது வாழ்வு பிறக்கட்டும் -இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

வெற்றிகள் குவியட்டும் ;
அதன் அலைகள் உன்னை நனைக்கட்டும்-இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

கனவுகள் நிறைவேறட்டும் ;
மகிழ்ச்சி நிறையட்டும் !-இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 




Share/Bookmark

Tuesday, October 11, 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பொங்கி வரும் கொங்கு தமிழே !

வசீகரிக்கும் மழலை சிரிப்பே !

உள்ளத்தின் உண்மையே !

இதயத்தின் தூய்மையே !

பாசமிகு தம்பியே !

அன்பிற்குரிய நண்பனே !

கடல் அலையின் அதிர்வுகள் ...

கரைகளை வருடுவதைப்போல

இன்றைய நாளின் சந்தோசம் ...

எங்களையும் வருடி செல்லட்டும் உன்னோடு சேர்ந்து !

"உன் கனவுகள் வானைதொடட்டும் ;

வெற்றிகள் உனக்கு மாலையிடட்டும்!"

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்




Share/Bookmark

Saturday, October 1, 2011

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் !
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் !
உன் கனவுகள் வானத்தை தொடட்டும் !
உன் வெற்றிகள் உன்னை  முத்தமிடட்டும் !


 இனிய நண்பனுக்கு உள்ளம் மகிழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்



Share/Bookmark

Saturday, September 24, 2011

அன்பையும் தானமாக கொடுக்கலாமே...

கண் தானம் ,உறுப்பு தானம் ஒருவர் இறந்த பிறகு கொடுப்பது ;இருக்கும் வரை ரத்ததானம் செய்கிறோம் அதைப்போலவே அன்பையும் கொடுக்கலாமே ?
அள்ள அள்ள குறையாதது அன்பு எங்கும் எப்போதும் ,யாராக இருந்தாலும் எப்போதுமே எதையும்  எதிர் பார்க்காத அன்பு புனிதமானது !

Share/Bookmark

Sunday, September 18, 2011

சாதனை மன்னர்கள் (மதில் சுவர் டிராவிட்)- மலர் 2

                                                             
டிராவிட்  ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் மறக்க முடியாத ஒரு பெயர் .விளையாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர் என்று சொல்லுவதை விட இவர் அவர்களில் சிறந்தவர் என்று சொன்னால் அதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் !
         புகழுக்காக , பணத்திற்காக மட்டும் ஆடாதவர் , அமைதியானவர் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
         உலக ஒருதின மற்றும் 20 -20 போட்டிகளிலிருந்து கடந்த வாரத்தில் ஓய்வு அறிவித்துவிட்ட டிராவிட் இன்னும் ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த வீரராக இருக்கிறார் .
        எப்படி சீனாவிற்கு  ஒரு சீனா பெருஞ்சுவரோ அப்படி கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத ஒரு மதில் சுவர் டிராவிட் - இனி யார் அவர் இடத்தை நிரப்புவார்கள் ?????
        

Share/Bookmark

Sunday, September 4, 2011

என்ன செய்கிறது ஐக்கியநாடுகள் சபை ?

விரைவில்...


ஒரு இனத்தின் திட்டமிட்ட அவலங்களும் ,அழிவுகளும் !



Share/Bookmark

நிறைகளைத் தேடும் மனிதனின் பயணம் ...இது சரிதானா ?

    நிறைகளை ஏற்றுக்கொள்ளவே நம்மில் பலர் எப்போதும் தயாராக      இருப்போம் .எதனையும் பெற்றுக்கொள்ளவே மனிதனின் கைகளும்,மனதுகளும் துடித்துக்கொண்டு இருக்கும் !வாழ்க்கை என்பது நிறைகளின்           சங்கமம்மா ?இல்லை வாழ்க்கை என்பது பெற்றுக்கொள்வதற்கு மட்டுமா ?
                இன்று அன்பு கூட சுயநல வலைக்குள்ளே சிக்கித்                             தவிக்கிறது !எதையாவது எதிர்பார்த்துதான் அன்பு இங்கே துளிர்க்கிறது! தனக்காக ,தன் இனத்திற்காக , தன் மொழிக்காக ,தன் மதத்திற்காக என்று அன்பின் எல்லைகள்  இங்கே சுருங்கிவிட்டன.
                                          
                   அதனாலதான் 6 அறிவு இருந்தும் கூட சக மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளத்தெரியாத மிருகத்தை விட கேவலமாக மனிதன் இருக்கிறான்!

Share/Bookmark

Saturday, September 3, 2011

மங்காத்தா ஒரு பார்வை...

     பணமும் அது செய்யும் விளையாட்டுகள் தான் மங்காத்தா !தனது மாஸ் ஹீரோ இடத்திலிருந்து இறங்கி வந்து நடித்திருக்கும் அஜித் , ஆக்சன் கிங் இடத்திலிருந்து இறங்கி வந்து நடித்த அர்ஜுன் இவர்கள் சில நடிகர்களோடு இணைந்து விளையாட்டும் பண விளையாட்டே மங்காத்தா !.


                                     

    இது ஒரு 50 ஓவர் விளையாட்டைப்போல இருப்பதால் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சபாஷ் போட வைக்கிறது .அஜித் ரசிகர்களை இப்படம் கவர்ந்து இழுப்பதில் ஆச்சர்யம் இருக்க முடியாது !
                                             
                3 பாடல்கள் நம்மையும் ஆட வைக்கின்றன .அங்கங்கே லாஜிக் இடித்தாலும் நன்றாகவே படம் பயணம் செய்கிறது .மங்காத்தா என்று சொல்லி பெரும்பாலும் கன் அண்ட் புல்லெட்டோடூ விளையாடி இருக்கிறார்கள் .புதுமுகம் இரு நடிகர்கள் நன்றாக நடித்து உள்ளார்கள் .பிரேம்ஜி வரும் இடங்கள் கல கலப்பு .
                                              
           படம் முடிந்த பிறகு ஒளி பரப்பப்படும்  ஷூட்டிங் காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கின்றன.மொத்தத்தில் மங்காத்தா அனைவரும் விளையாடக்கூடிய ஒரு ஜாலியான விளையாட்டு !









Share/Bookmark

Thursday, September 1, 2011

இந்தியா - பாகிஸ்தான் நட்பு ??!!

                                        
      பிரிந்து வாழ்வது நன்மை எனில் பிரிவு கூட உன்னதமானது ! ஆனால் இந்தியா -பாகிஸ்தான் பிரிவு?
             ஒரு சில ஆட்சியாளர்களின் அரசியல் விளையாட்டுகள் எப்படி தேசத்தின் ஒரே பார்வையாக இருக்க முடியும் ?அன்பு ,சமாதனம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !மக்களை புறந்தள்ளி விட்டு யாருக்காக இந்த அரசியல்? எதிர்காலம் எல்லாம்?
                                                
             நாம் கைகோர்த்து நடந்தால் வருங்கால வரலாறு நம்மை விட்டு புதிதாக எதுவும் எழுதிவிட முடியாது !ஆனால் நாமோ மதத்தாலும்,அரசியல் காழ்ப்புனற்சியலும் வருங்கால நமது சந்ததியினரின் எதிர்காலத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் ?இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ?
                           
                         
            அந்நியனை விரட்டிய நமக்கு நம்மிடையே இருந்த காழ்ப்புனற்சியை விரட்ட முடியாதது  வெட்கப்படவேண்டியது என்பதையும் ,ஆயுதம் ஒருபொழுதும்  எதற்கும் தீர்வாகாது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம் .அன்புள்ளவர்கள் புரிந்து நடப்பார்கள் !

Share/Bookmark

Wednesday, August 31, 2011

மறைமுக யுத்தம் தொடர் எண் -2

தொடர்ச்சி...

                                                
                            கடந்த தொடர் எண் 1 இல் சிங்கள மொழி ,புத்த மதம் இன அழிவுக்கு காரணம் அல்ல என்று சொல்லி இருந்தோம் .ஏனெனில் ஆயிரம் ,ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் சக மனிதனை மதிக்க தெரியாதவர்கள் தான் பிரச்சனைக்கு காரணமே அன்றி எப்போதும் மதங்களும் ,மொழிகளும் எந்த பிரச்சனைக்கும் காரணமாகாது !
                        எல்லா மனிதர்களையும் அப்படி நாம் சொல்லிவிட முடியாது .ஆனால் தமிழனுக்காக தமிழன் மட்டும் தான் போராட வேண்டும் என்பது இல்லை .இதே தீவில் விடுதலைக்காக எத்தனையோ தமிழர்கள் அன்று சிங்கள மக்களோடு சேர்ந்து போராடினார்கள் அப்போது தமிழர்கள் நினைத்து இருந்தால் தனி நாடு கேட்டு போய் இருந்திருக்க முடியும் .ஏன் செய்யவில்லை ?எதற்காக செயவில்லை ? அவர்கள் சிங்கள மக்களை முழுவதும் நம்பினார்கள் ,அவர்களோடு சேர்ந்து வாழ எண்ணினார்கள் .அப்படிபட்ட தமிழர்களுக்கு செயும் கைம்மாறு இதுதானா ?அன்புள்ளவர்கள் யோசிப்பார்கள் !
                   நீங்கள் புத்தனை தேடுகிறீர்கள் நாங்கள் புத்தனை மட்டும் 

                                               
அல்ல போதி மரத்தையும் அல்லவா தேடுகிறோம் !

                          மறைமுக யுத்தம் தொடரும் .....

Share/Bookmark

சாதனை மன்னர்கள் - மலர் 1

    


                                                      
 சத்தமில்லாமல் ஒரு சாதனை யாருக்கும் தெரியாமல் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறது ;இந்தியாவில் அவளவாக பிரபலமாகாத ஒரு விளையாட்டில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இன்று உலக போட்டிகளிலிருந்து  ஓய்வு அறிவித்து விட்ட கால்பந்தாட்ட வீரர் பைசுங்பூட்டியா அவர்களையும் , அவர் சாதனைகளையும் நாம் நினைவில் நிறுத்துவதை விட அவரைப் போல இன்னும் பல வீரர்களை உருவாக்குவதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை !
                                                       


Share/Bookmark

Sunday, August 28, 2011

முகமூடிகள் - தொடர் எண் 1

இந்த உலகமே ஒரு நாடக மேடை ;
அதில் நாம் ஒவ்வொருவரும் நடிகர் , நடிகையர்  என்றார் சேக்ஸ்பியர் .இன்று நம்மை சுற்றிலும் ,ஏன் பல நேரங்களில் நமக்குள்ளும் நாம் இந்த முகமூடிகளை அணிந்து கொண்டுதான் இருக்கின்றோம் மறுப்பதற்கு இல்லை .
                                          
      அப்படிப்பட்ட நம்மோடு பயணிக்கின்ற முகமூடிகளை பற்றி பேசுவோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்"  என்று முன்னூறு  ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன, ஏன் வாழ்ந்த ஒரு இனத்திற்கு தன்னோடு விடுதலை போராட்டம் நடத்திய ஒரு இனம் சம உரிமை தருகிறேன் என்று சொல்லி ,நாம் ஒன்றாக நாட்டை ஆள்வோம் என்று சொல்லி இன்று சொந்த நாட்டிலே ஒரு அகதிகளாய் மாற்றிய அந்த பேரினவாதிகள் உண்மையில் முகமூடிகள் வேய்ந்த இதயமற்றவர்கள்!
   அன்பின் கருணையான வடிவிலே உள்ள புத்தருக்கும் அவர்கள் இன்று வலுக்கட்டாயமாக முகமூடிகள் போட்டு இருக்கிறார்கள் என்பதை உலகம் மறக்கலாம் ஆனால் தமிழரின் கல்லறைகள் கூட மறந்துவிடக்கூடாது !
                                                                           முகமூடிகள் இன்னும் அணிவோம் .......                               

Share/Bookmark

அன்னை தெரசா அவர்களின் தினசரி பிராத்தனை...


இறைவா அமைதியின் கருவியாய் என்னை ஆக்கி அருளும் ;
பகை உள்ள இடத்தில அன்பையும் ;
தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும் ;
பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும் ;
ஐயமுள்ள இடத்தில் உறுதியையும் ;
விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையும் ;
இருள் உள்ள இடத்தில் ஒளியையும் ;
மருள் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்;
நான் விதைப்பேனாக!

   -பிராத்தனை கூட அன்பு கலந்ததாள்தான் தெரசா இன்று உலகம் மதிக்கும் அன்னையானார் !



















Share/Bookmark

நேர் எதிர் பக்கத்தில்

மனசாட்சியைக்  கொன்றுவிட்டு ,
நீங்கள் பெற்ற  வெற்றி ;
எப்படி வரலாற்றின் பதிவுகளில்
வெற்றி  என்று பதிவு செய்யப்படுகிறதோ ?
 அதே வரலாற்றின் நேர் எதிர் பக்கங்களில்
ஒரு தேசிய இனத்தின் மோசமான அழிவையும்
 நிச்சயம் பதிவு செய்யும் !












Share/Bookmark

Saturday, August 27, 2011

மறைமுக யுத்தம் தொடர் எண் -1

  வரலாற்றுப் பக்கங்களில் ஒரு தேசிய இனத்தை வலுக்கட்டாயமாக பலவழிகளில் அழிக்கின்ற பேரினவாதத்தின் கொடிய கைகள் இனி எப்போதும்  அரவணைக்க போவதில்லை !,பாறை போன்ற கடினமான மனமும் இனி எப்போதும் மாறபோவதில்லை !


    இன்று போர் மேகங்கள் குண்டு மழைகளைப் பொழிந்து ஆண்டுகள் பல நிறைவடைந்து இருக்கலாம் ஆனாலும் அடக்கி ஆளும் எண்ணமும் ,ஒரு இனத்தை அழிக்க துடிக்கின்ற எண்ணமும் மறைமுகமாக ஆரம்பித்து விட்டது என்ற செய்தியை இணையத்திலும் ,செய்திதாள்களிலும் இதயம் கொண்ட அன்பர்களின் வழியாக நாம் வேதனையுடன் இன்றும் படித்து கொண்டுதான் இருக்கின்றோம்.
    சிங்கள மொழியோ ,புத்த மதமோ ஒருநாளும் ஒரு இனத்தை அழிக்க முனைவது இல்லை .அப்போது யார் இதற்கு காரணம்?ஏன் இவ்வாறு செய்கிறார்கள் ? 

                              இன்னும் பேசுவோம்...யுத்தம் தொடரும்...



 


Share/Bookmark

Wednesday, August 24, 2011

இந்த வார எதிரொலி - தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு என்பது தமிழருடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடோடு தொடர்புடையது


அன்று ,அரசியலோடு தொடர்புடையது அல்ல .
    ஆனால் இன்று அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதிரியாகவும் ,இந்த


கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதிரியாகவும் கொண்டாட தமிழ் புத்தாண்டு என்ன அரசியல் மேடையா?





Share/Bookmark

Saturday, August 20, 2011

மனிதனின் பார்வையில் மொழி

மொழிகளின் எல்லைகள் விசாலமானவை;
மனிதர்களின் பார்வைகளோ குறுகலானவை !



Share/Bookmark

Sunday, August 14, 2011

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.....

உலகமே சுதந்திர காற்றை ஆய்தத்தின் வழியே சுவாசித்தபோதும்,அஹிம்சையால் சுதந்திர காற்றை சுவாசித்த நாடு இந்தியா!

இன்று வரை அமைதி தீபத்தை மட்டுமே கைகளில் ஏந்தி ,வம்பு சண்டைகளுக்கு போகாத வந்த சண்டைகளை விடாத நாடு இந்தியா !

மதத்தால் ,மொழியால் ,இனத்தால் வேறுபட்டாலும் இந்தியாவிற்கு மட்டும் எப்போதும் இதயம் என்பது ஒன்றுதான் !

ஆனால் இன்று மதத்தாலும் ,மொழியாலும் ,இனத்தாலும் ,அரசியல் ஆதாயத்தாலும்,ஊழலாலும்,வறுமையாலும் ,தீவிரவாதத்தாலும் காயம் பட்டு  கிடைக்கிறது....

காயம் பட்ட நம் தேசத்தின் விடியல் எங்குள்ளது ??நாளைய எதிர்காலமான இளைனர்களின் கைகளில்தான்!எப்படி வயோதிக காலத்தில் பெற்றோரின் வாழ்க்கை பிள்ளைகளின் வசமோ ?அதைபோல் தான் நம் தேசத்தின் வாழ்க்கையும் இளைனர்களின் கைகளில் மட்டும் தான் என்றால் மிகையில்லை !

காலமாற்றம் நம் சுதந்திரத்தின் வலிகளை மறக்க செய்திருக்கலாம்,நவீன உலகில் என் இளைனன் சுதந்திரத்தின் பின்னே உள்ள வலிகளை உணர வாய்ப்பு இல்லாமல் இருந்து  இருக்கலாம் ஆனால் சுதந்திர காற்றின் பின்னே உள்ள வலிகளையும் மறந்திடகூடாது,அப்போதுதான் சுதந்திரத்தின் சந்தோசம் என்றும் நிலைத்து இருக்கும் !!!!







Share/Bookmark

Friday, August 12, 2011

எமக்கு ஏது மரணம் !

எம் மண்ணில் எம்மை வாழவிடாது கொல்கிறாய்...

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளாய் !

வருடுகின்ற தென்றலாய் !

கூவுகின்ற குயிலாய் !

எப்போதும் யாம் எம் மண்ணை சுற்றித்தான் இருப்போம் என்பதை மறந்து போனாயோ !!


Share/Bookmark

கல்லறையும்! தமிழும்!

யாம் கல்லறையில் உறங்கினாலும் ;

எம் தமிழ் எப்பொழுதும் விழித்து கொண்டுதான் இருக்கும் !



Share/Bookmark

Tuesday, August 9, 2011

அரசியல் தீர்வு எட்டா கனியா?

ஆண்டுகள் அறுபது கடந்தது;

ஆட்சிகளும் மாறியது ;

ஆனால் அடக்கி ஆளும் எண்ணம் மட்டும் மாறவில்லை;

அமைதி போராட்டம் ஆய்தமானது,

ஆய்த போராட்டம் எம் அழிவிலும் முடிந்தது...

தமிழனாய் பிறந்ததால் கல்லறைதான் மிஞ்சியதா ??

யாம் இறந்த போதே ஜனநாயகமும் இறந்ததா ?!

உலகை ஆண்ட எமக்கு இன்று அரசியல் தீர்வு எட்டா கனியா?

Share/Bookmark

Monday, August 8, 2011

அறிவியல் தமிழ் எங்கே??


இயல் ,இசை , நாடகம் கண்ட என் தமிழ் ;

அரசியல் ,வீரம் ,காதல் சொன்ன என் தமிழ்;

அறம்,பொருள் ,இன்பம் தந்த என் தமிழ் ;

அறிவு , ஆன்மீகம் ,மருத்துவம் வழங்கிய என் தமிழ்;

அறிவியலை மட்டும் உன்னிடம் எதிர் பார்த்து காத்து இருக்கிறதோ ??

எழுந்து வா என் தமிழ் இளைனனே!

அறிவியல் தமிழ் உனக்காக காத்திருக்கிறது !!



Share/Bookmark

Sunday, August 7, 2011

அன்பு...

சுவாசிக்கும் வரை...
நேசித்து கொண்டு இருப்போம்...


Share/Bookmark

இன்றைய தமிழனின் நிலை...

இருந்தாலும்,இறந்தாலும்
இலங்கையின் வரலாறு
தமிழனை வைத்தே எழுதப்படும்!



Share/Bookmark