பொதிகை சாரல்



Saturday, September 29, 2012

தீண்டாமையில் ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?


   பிறப்பில் சிலர் உயர்ந்தவர் என்றும் , தாழ்ந்தவர் என்றும் நிர்ணயிக்கும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?
கடவுளா என்றால் அதற்கும் சரியான தகவல் இல்லை .ஏன் என்றால் இங்கே கடவுளில் கூட இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இருக்கிறதே ?
   கீழ் சாதிக்காரனை கோவிலுக்கு வர அனுமதிக்காத இந்த சமூகம் ,அவர்கள் தரும் காணிக்கையை மட்டும் அனுமதிப்பது எவ்வாறு?
தாழ்ந்த சாதிகாரனை உயர்ந்த பதவியில் அமர்த்திப் பார்க்காத இந்த சமூகம் ,அவனிடம் இருக்கும் வாக்குரிமைக்காக பிச்சை எடுப்பதை விட கேவலமாக நிற்கும்  போது எங்கே போனது இந்த சாதி ? ஏன் கூலி வேலைக்காக தாழ்ந்த சாதிகரனை பணிக்கு  அமர்த்த வேண்டும்?அப்பொழுது ஒட்டாதா அந்த சாதி?
என்ன இது வேடிக்கை ? ஏன் இந்த கீழ்த்தனம்?

    ஒன்று மட்டும் தெரிகிறது ,தனக்கு அடிமையாய் இருப்பவன் நாளை நமக்கு சரிசமமாக வரக்கூடாது என்ற கேவல எண்ணமே இந்த சாதியை உருவாக்கி இருக்கிறது ,பின்னாடி வரும் சந்ததி அதை தொடர்கிறது ?
உண்மையில் கீழ் சாதி எனப்படுபவன் , சாதி என்ற நோயால் பாதிக்கப் பட்ட மிருகம் !

Share/Bookmark

Wednesday, September 5, 2012

படிக்க தவறாதீர்கள் !

இலங்கை மக்கள் தாக்கப்பட்ட செய்தியும்
அதனை ஒட்டி தினமணி வெளியிட்ட தலையங்கமும்
அதன் மீதான மூன்றாவது பார்வையும் !

சர்வதேச அரசியலில் இறங்குவோம் ,உணர்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இன்னும் நிதானமாக , ஆழமாக !

என்ற புதிய கட்டுரை  உங்கள் தமிழ் கவிதை அருவியில் ! படிக்க தவறாதீர் !
 

                                http://tamilodupayanam.blogspot.in/
          (இந்த லிங்கை சொடுக்கி (கிளிக் செய்து ) படியுங்கள் !)



Share/Bookmark

Sunday, September 2, 2012

பாரதி வேறில்லை ! தமிழ் வேறில்லை !

யாமறிந்த புலவரில் கம்பனைப் போல
வள்ளுவர் போல
இளங்கோவைப் போல
பூமிதனில் யாரையும் பார்த்ததில்லை என்கிறாய் !
என்னே தன்னடக்கம் !
பாரதியே
இது உண்மை
அவர்கள் எல்லாம் உன் கவிதையைப்
படித்திருந்தால்
பாரதி வேறில்லை , தமிழ் வேறில்லை
என்று சொல்லி இருப்பார்கள் !
உண்மை இது பாரதி !



                                            @பொதிகை சாரல்

Share/Bookmark