பொதிகை சாரல்



Tuesday, February 21, 2012

கேட்டதில் பிடித்தது

தாஜ்மஹாலை வாங்கலாம்
ஷாஜஹனாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உனக்குப் பின்பு வாழ்வதை....
" ஒருமுறை" - தாமரையின் வரிகள்  



Share/Bookmark

Saturday, February 18, 2012

முற்ப்பொழுதும் உன் கற்பனை

அதர்வாவின் அசத்தல்
ஆஹா அமலபால்
அமர்க்கள சந்தானம்
அழகிய தாமரையின் வரிகளோடு
கேட்ட கதைக்கருவின்
தற்போதைய புதிய பதிப்பாக
அதீத அன்பினால்
முற்ப்பொழுதும் உன் கற்பனை
அதே அதீத அன்பினால்
முடிவில் நிஜம்!
  

Share/Bookmark

Friday, February 17, 2012

மழலை மொழி

தப்பு தப்பாய் பேசினாலும் 
அதிலே இலக்கணப் பிழை இல்லை !
எவ்வளவு தேடியும் உன் சொற்கள் 
அகராதியில் இல்லை !
மோதல் அரசியலுக்கு 
ஆட்சி மொழியும் அது இல்லை !
இருப்பதாய் சொல்லப்படும் 
இறையை(வனை)யும்  அது முன்மொழியவில்லை !
எவ்வளவு கேட்டாலும் அது விளங்கவில்லை !
ஆனாலும் அது இனிக்காமலில்லை -மழலை மொழி !!



Share/Bookmark

மெல்ல நகருது தமிழகம் இனி வரப்போவது பாலை நிலம் !

மலை சார்ந்த குறுஞ்சி

இப்போது கற்குவியல் ஆகி கொண்டிருக்க
காடுகள் சார்ந்த முல்லை

இன்று தன் முகவரியை இழந்து கொண்டிருக்க
வயல்கள் சார்ந்த மருதம்

இன்று வியாபார நிலமாகிட
கடல்கள் சார்ந்த நெய்தல்

இன்று மாசுபட்டு கொண்டிருக்க
மெல்ல நகருது தமிழகம்

இனி வரப்போவது பாலை நிலம் ! 

Share/Bookmark

குழந்தைக்கு எத்தனை அழகு ?!

எடுத்ததை எடுத்த இடத்தில்
வைப்பது அழகு !
அதை கலைத்து விடுவதில்தான்
குழந்தைக்கு எத்தனை அழகு ?!


Share/Bookmark

நிலா எங்கும் உன் உலா !

மழலைக்கு நீ நிலா சோறு
காதலுக்கு நீ தூது
கவினனுக்கு நீ காதலி
தனிமைக்கு நீ துணை
அறிவிற்கு நீ ஆராய்ச்சி
நிலா எங்கும் உன் உலா !
 

Share/Bookmark

வெற்றியும் தோல்வியும்!

வெற்றியும் தோல்வியும்
தன் எல்லைகளை வரையறை
செய்யாத பொழுது ;
எனக்கு மட்டும் எப்படி
வெற்றியும் ,தோல்வியும் ?


Share/Bookmark

Saturday, February 4, 2012

உற்சாக தூறல் -தமிழில் பிறந்த நாள் வாழ்த்து

திசையெல்லாம் கொணரும் 
வாழ்த்துக்களின் அலைகள் 
உள்ளமெனும் மேகத்திரையில் 
அன்பெனும் அதிர்வுகளால் 
உற்சாக தூறல் பொழியட்டும் 
மகிழ்ச்சி பரவட்டும் !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!



Share/Bookmark

Friday, February 3, 2012

ஒரே ஜனநாயகத்தின் இருவிழிப் பார்வை

சுதந்திரமாக சுவாசிக்கும் ஒரு இனம் 
முள்வேலிக்குள் ஒரு இனம் 
ஒரே ஜனநாயகத்தின் இருவிழிப் பார்வை !
65 ஆண்டை நோக்கி  தொடர்கிறது !!
            
                                           

 

Share/Bookmark

Thursday, February 2, 2012

மௌன குரு - விமர்சனம்

கலைந்து செல்கின்ற மேக கூட்டங்கள்
எல்லாம் மழை பொழிவதில்லை !
நம்மைச் சுற்றி பயணம் செய்யும்
நிகழ்வுகளெல்லாம்  பேசிவிடுவதும் இல்லை !
பேச முற்ப்பட்டு மௌனம் கலைத்த
ஒரு நிகழ்வு
கண்களில் நீரைத் தந்து
சோகமாய் கலைந்தது
நம்முடைய மௌனத்தையும் கலைத்தது- அந்த மௌன குரு!!

Share/Bookmark