பொதிகை சாரல்



Friday, February 17, 2012

மழலை மொழி

தப்பு தப்பாய் பேசினாலும் 
அதிலே இலக்கணப் பிழை இல்லை !
எவ்வளவு தேடியும் உன் சொற்கள் 
அகராதியில் இல்லை !
மோதல் அரசியலுக்கு 
ஆட்சி மொழியும் அது இல்லை !
இருப்பதாய் சொல்லப்படும் 
இறையை(வனை)யும்  அது முன்மொழியவில்லை !
எவ்வளவு கேட்டாலும் அது விளங்கவில்லை !
ஆனாலும் அது இனிக்காமலில்லை -மழலை மொழி !!



Share/Bookmark

மெல்ல நகருது தமிழகம் இனி வரப்போவது பாலை நிலம் !

மலை சார்ந்த குறுஞ்சி

இப்போது கற்குவியல் ஆகி கொண்டிருக்க
காடுகள் சார்ந்த முல்லை

இன்று தன் முகவரியை இழந்து கொண்டிருக்க
வயல்கள் சார்ந்த மருதம்

இன்று வியாபார நிலமாகிட
கடல்கள் சார்ந்த நெய்தல்

இன்று மாசுபட்டு கொண்டிருக்க
மெல்ல நகருது தமிழகம்

இனி வரப்போவது பாலை நிலம் ! 

Share/Bookmark

குழந்தைக்கு எத்தனை அழகு ?!

எடுத்ததை எடுத்த இடத்தில்
வைப்பது அழகு !
அதை கலைத்து விடுவதில்தான்
குழந்தைக்கு எத்தனை அழகு ?!


Share/Bookmark

நிலா எங்கும் உன் உலா !

மழலைக்கு நீ நிலா சோறு
காதலுக்கு நீ தூது
கவினனுக்கு நீ காதலி
தனிமைக்கு நீ துணை
அறிவிற்கு நீ ஆராய்ச்சி
நிலா எங்கும் உன் உலா !
 

Share/Bookmark

வெற்றியும் தோல்வியும்!

வெற்றியும் தோல்வியும்
தன் எல்லைகளை வரையறை
செய்யாத பொழுது ;
எனக்கு மட்டும் எப்படி
வெற்றியும் ,தோல்வியும் ?


Share/Bookmark