பொதிகை சாரல்



Saturday, May 12, 2012

தமிழ் இனி மெல்லச் சாகும்?! - தொடர் 1


   உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று என்பது நாம் அறிந்ததே (தமிழ் பேசும் மக்கள் இதனை அறிந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன் ).
   உலகில் இப்போது பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில் ,அந்த அந்த மொழிகளை தங்கள் பெயராகவோ,தங்கள் குழந்தையை தாலாட்டும் தாலாட்டுப் பாடல்களிலோ ,தங்கள் காதலியை புகழ்ந்து பேசும் பொழுதோ ,நாட்டுப் புறப் பாடல்களிலோ ,அறு சுவைகளிலோ மொழியின் பெயரை வைத்து இருப்பார்களோ என்று யாரும் சொன்னதாக தெரிய வில்லை. 
      உதாரணத்திற்கு தமிழ் அரசன்,தமிழ்ச் செல்வன் ,தமிழ் அரசி  என்ற பெயரில் தமிழ் என்பது மொழியை குறிக்கும்.வேறு எந்த மொழி பேசுவர்களும் அந்த மொழியின் பெயரை தங்கள் பெயராக வைத்து கொண்டதாக படித்ததில்லை.
அதே போல தமிழின் சுவை போல என்று கவிஞர்கள் கூறி கேட்டு இருக்கலாம் .உண்மையில் மொழிக்கு சுவை உண்டா?காதலர்கள் கூட
தன் காதலியை "அவள் தமிழ் போல் அழகு " என்று சொல்லுவார்கள் .மொழிக்கு என்ன மனிதனை போல உடல் இருக்கிறதா?

                                                                                          சிந்தியுங்கள் இன்னும் பேசுவோம்.

Share/Bookmark