பொதிகை சாரல்



Wednesday, August 31, 2011

மறைமுக யுத்தம் தொடர் எண் -2

தொடர்ச்சி...

                                                
                            கடந்த தொடர் எண் 1 இல் சிங்கள மொழி ,புத்த மதம் இன அழிவுக்கு காரணம் அல்ல என்று சொல்லி இருந்தோம் .ஏனெனில் ஆயிரம் ,ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் சக மனிதனை மதிக்க தெரியாதவர்கள் தான் பிரச்சனைக்கு காரணமே அன்றி எப்போதும் மதங்களும் ,மொழிகளும் எந்த பிரச்சனைக்கும் காரணமாகாது !
                        எல்லா மனிதர்களையும் அப்படி நாம் சொல்லிவிட முடியாது .ஆனால் தமிழனுக்காக தமிழன் மட்டும் தான் போராட வேண்டும் என்பது இல்லை .இதே தீவில் விடுதலைக்காக எத்தனையோ தமிழர்கள் அன்று சிங்கள மக்களோடு சேர்ந்து போராடினார்கள் அப்போது தமிழர்கள் நினைத்து இருந்தால் தனி நாடு கேட்டு போய் இருந்திருக்க முடியும் .ஏன் செய்யவில்லை ?எதற்காக செயவில்லை ? அவர்கள் சிங்கள மக்களை முழுவதும் நம்பினார்கள் ,அவர்களோடு சேர்ந்து வாழ எண்ணினார்கள் .அப்படிபட்ட தமிழர்களுக்கு செயும் கைம்மாறு இதுதானா ?அன்புள்ளவர்கள் யோசிப்பார்கள் !
                   நீங்கள் புத்தனை தேடுகிறீர்கள் நாங்கள் புத்தனை மட்டும் 

                                               
அல்ல போதி மரத்தையும் அல்லவா தேடுகிறோம் !

                          மறைமுக யுத்தம் தொடரும் .....

Share/Bookmark

சாதனை மன்னர்கள் - மலர் 1

    


                                                      
 சத்தமில்லாமல் ஒரு சாதனை யாருக்கும் தெரியாமல் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறது ;இந்தியாவில் அவளவாக பிரபலமாகாத ஒரு விளையாட்டில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இன்று உலக போட்டிகளிலிருந்து  ஓய்வு அறிவித்து விட்ட கால்பந்தாட்ட வீரர் பைசுங்பூட்டியா அவர்களையும் , அவர் சாதனைகளையும் நாம் நினைவில் நிறுத்துவதை விட அவரைப் போல இன்னும் பல வீரர்களை உருவாக்குவதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை !
                                                       


Share/Bookmark

Sunday, August 28, 2011

முகமூடிகள் - தொடர் எண் 1

இந்த உலகமே ஒரு நாடக மேடை ;
அதில் நாம் ஒவ்வொருவரும் நடிகர் , நடிகையர்  என்றார் சேக்ஸ்பியர் .இன்று நம்மை சுற்றிலும் ,ஏன் பல நேரங்களில் நமக்குள்ளும் நாம் இந்த முகமூடிகளை அணிந்து கொண்டுதான் இருக்கின்றோம் மறுப்பதற்கு இல்லை .
                                          
      அப்படிப்பட்ட நம்மோடு பயணிக்கின்ற முகமூடிகளை பற்றி பேசுவோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்"  என்று முன்னூறு  ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன, ஏன் வாழ்ந்த ஒரு இனத்திற்கு தன்னோடு விடுதலை போராட்டம் நடத்திய ஒரு இனம் சம உரிமை தருகிறேன் என்று சொல்லி ,நாம் ஒன்றாக நாட்டை ஆள்வோம் என்று சொல்லி இன்று சொந்த நாட்டிலே ஒரு அகதிகளாய் மாற்றிய அந்த பேரினவாதிகள் உண்மையில் முகமூடிகள் வேய்ந்த இதயமற்றவர்கள்!
   அன்பின் கருணையான வடிவிலே உள்ள புத்தருக்கும் அவர்கள் இன்று வலுக்கட்டாயமாக முகமூடிகள் போட்டு இருக்கிறார்கள் என்பதை உலகம் மறக்கலாம் ஆனால் தமிழரின் கல்லறைகள் கூட மறந்துவிடக்கூடாது !
                                                                           முகமூடிகள் இன்னும் அணிவோம் .......                               

Share/Bookmark

அன்னை தெரசா அவர்களின் தினசரி பிராத்தனை...


இறைவா அமைதியின் கருவியாய் என்னை ஆக்கி அருளும் ;
பகை உள்ள இடத்தில அன்பையும் ;
தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும் ;
பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும் ;
ஐயமுள்ள இடத்தில் உறுதியையும் ;
விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையும் ;
இருள் உள்ள இடத்தில் ஒளியையும் ;
மருள் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்;
நான் விதைப்பேனாக!

   -பிராத்தனை கூட அன்பு கலந்ததாள்தான் தெரசா இன்று உலகம் மதிக்கும் அன்னையானார் !



















Share/Bookmark

நேர் எதிர் பக்கத்தில்

மனசாட்சியைக்  கொன்றுவிட்டு ,
நீங்கள் பெற்ற  வெற்றி ;
எப்படி வரலாற்றின் பதிவுகளில்
வெற்றி  என்று பதிவு செய்யப்படுகிறதோ ?
 அதே வரலாற்றின் நேர் எதிர் பக்கங்களில்
ஒரு தேசிய இனத்தின் மோசமான அழிவையும்
 நிச்சயம் பதிவு செய்யும் !












Share/Bookmark

Saturday, August 27, 2011

மறைமுக யுத்தம் தொடர் எண் -1

  வரலாற்றுப் பக்கங்களில் ஒரு தேசிய இனத்தை வலுக்கட்டாயமாக பலவழிகளில் அழிக்கின்ற பேரினவாதத்தின் கொடிய கைகள் இனி எப்போதும்  அரவணைக்க போவதில்லை !,பாறை போன்ற கடினமான மனமும் இனி எப்போதும் மாறபோவதில்லை !


    இன்று போர் மேகங்கள் குண்டு மழைகளைப் பொழிந்து ஆண்டுகள் பல நிறைவடைந்து இருக்கலாம் ஆனாலும் அடக்கி ஆளும் எண்ணமும் ,ஒரு இனத்தை அழிக்க துடிக்கின்ற எண்ணமும் மறைமுகமாக ஆரம்பித்து விட்டது என்ற செய்தியை இணையத்திலும் ,செய்திதாள்களிலும் இதயம் கொண்ட அன்பர்களின் வழியாக நாம் வேதனையுடன் இன்றும் படித்து கொண்டுதான் இருக்கின்றோம்.
    சிங்கள மொழியோ ,புத்த மதமோ ஒருநாளும் ஒரு இனத்தை அழிக்க முனைவது இல்லை .அப்போது யார் இதற்கு காரணம்?ஏன் இவ்வாறு செய்கிறார்கள் ? 

                              இன்னும் பேசுவோம்...யுத்தம் தொடரும்...



 


Share/Bookmark

Wednesday, August 24, 2011

இந்த வார எதிரொலி - தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு என்பது தமிழருடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடோடு தொடர்புடையது


அன்று ,அரசியலோடு தொடர்புடையது அல்ல .
    ஆனால் இன்று அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதிரியாகவும் ,இந்த


கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதிரியாகவும் கொண்டாட தமிழ் புத்தாண்டு என்ன அரசியல் மேடையா?





Share/Bookmark

Saturday, August 20, 2011

மனிதனின் பார்வையில் மொழி

மொழிகளின் எல்லைகள் விசாலமானவை;
மனிதர்களின் பார்வைகளோ குறுகலானவை !



Share/Bookmark

Sunday, August 14, 2011

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.....

உலகமே சுதந்திர காற்றை ஆய்தத்தின் வழியே சுவாசித்தபோதும்,அஹிம்சையால் சுதந்திர காற்றை சுவாசித்த நாடு இந்தியா!

இன்று வரை அமைதி தீபத்தை மட்டுமே கைகளில் ஏந்தி ,வம்பு சண்டைகளுக்கு போகாத வந்த சண்டைகளை விடாத நாடு இந்தியா !

மதத்தால் ,மொழியால் ,இனத்தால் வேறுபட்டாலும் இந்தியாவிற்கு மட்டும் எப்போதும் இதயம் என்பது ஒன்றுதான் !

ஆனால் இன்று மதத்தாலும் ,மொழியாலும் ,இனத்தாலும் ,அரசியல் ஆதாயத்தாலும்,ஊழலாலும்,வறுமையாலும் ,தீவிரவாதத்தாலும் காயம் பட்டு  கிடைக்கிறது....

காயம் பட்ட நம் தேசத்தின் விடியல் எங்குள்ளது ??நாளைய எதிர்காலமான இளைனர்களின் கைகளில்தான்!எப்படி வயோதிக காலத்தில் பெற்றோரின் வாழ்க்கை பிள்ளைகளின் வசமோ ?அதைபோல் தான் நம் தேசத்தின் வாழ்க்கையும் இளைனர்களின் கைகளில் மட்டும் தான் என்றால் மிகையில்லை !

காலமாற்றம் நம் சுதந்திரத்தின் வலிகளை மறக்க செய்திருக்கலாம்,நவீன உலகில் என் இளைனன் சுதந்திரத்தின் பின்னே உள்ள வலிகளை உணர வாய்ப்பு இல்லாமல் இருந்து  இருக்கலாம் ஆனால் சுதந்திர காற்றின் பின்னே உள்ள வலிகளையும் மறந்திடகூடாது,அப்போதுதான் சுதந்திரத்தின் சந்தோசம் என்றும் நிலைத்து இருக்கும் !!!!







Share/Bookmark

Friday, August 12, 2011

எமக்கு ஏது மரணம் !

எம் மண்ணில் எம்மை வாழவிடாது கொல்கிறாய்...

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளாய் !

வருடுகின்ற தென்றலாய் !

கூவுகின்ற குயிலாய் !

எப்போதும் யாம் எம் மண்ணை சுற்றித்தான் இருப்போம் என்பதை மறந்து போனாயோ !!


Share/Bookmark

கல்லறையும்! தமிழும்!

யாம் கல்லறையில் உறங்கினாலும் ;

எம் தமிழ் எப்பொழுதும் விழித்து கொண்டுதான் இருக்கும் !



Share/Bookmark

Tuesday, August 9, 2011

அரசியல் தீர்வு எட்டா கனியா?

ஆண்டுகள் அறுபது கடந்தது;

ஆட்சிகளும் மாறியது ;

ஆனால் அடக்கி ஆளும் எண்ணம் மட்டும் மாறவில்லை;

அமைதி போராட்டம் ஆய்தமானது,

ஆய்த போராட்டம் எம் அழிவிலும் முடிந்தது...

தமிழனாய் பிறந்ததால் கல்லறைதான் மிஞ்சியதா ??

யாம் இறந்த போதே ஜனநாயகமும் இறந்ததா ?!

உலகை ஆண்ட எமக்கு இன்று அரசியல் தீர்வு எட்டா கனியா?

Share/Bookmark

Monday, August 8, 2011

அறிவியல் தமிழ் எங்கே??


இயல் ,இசை , நாடகம் கண்ட என் தமிழ் ;

அரசியல் ,வீரம் ,காதல் சொன்ன என் தமிழ்;

அறம்,பொருள் ,இன்பம் தந்த என் தமிழ் ;

அறிவு , ஆன்மீகம் ,மருத்துவம் வழங்கிய என் தமிழ்;

அறிவியலை மட்டும் உன்னிடம் எதிர் பார்த்து காத்து இருக்கிறதோ ??

எழுந்து வா என் தமிழ் இளைனனே!

அறிவியல் தமிழ் உனக்காக காத்திருக்கிறது !!



Share/Bookmark

Sunday, August 7, 2011

அன்பு...

சுவாசிக்கும் வரை...
நேசித்து கொண்டு இருப்போம்...


Share/Bookmark

இன்றைய தமிழனின் நிலை...

இருந்தாலும்,இறந்தாலும்
இலங்கையின் வரலாறு
தமிழனை வைத்தே எழுதப்படும்!



Share/Bookmark